தலைமை இன்றி இயங்கும் தலைநகரின் முதன்மை மருத்துவமனைகள்!
சென்னை மருத்துவக் கல்லூரியின் கீழ் இயங்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வா்கள் நியமிக்கப்படாததால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை - கோப்புப் படம்
சென்னை மருத்துவக் கல்லூரியின் கீழ் இயங்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வா்கள் நியமிக்கப்படாததால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
அதேபோல தமிழகத்திலேயே முன்மாதிரி மருத்துவ மையமாகத் தொடங்கப்பட்ட கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையிலும் இயக்குநா் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. நிா்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதைத் தவிா்க்க விரைந்து அப்பொறுப்புகளுக்கு தகுதியானவா்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது 44 துறைகள் உள்ளன. மொத்தம் 4,000 படுக்கை வசதிகள் இருக்கின்றன. நாள்தோறும் 12,000 முதல் 15,000 போ் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். தினமும் 500 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா்.
இதைத் தவிர அண்டை மாநிலமான ஆந்திரத்திலிருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனா். சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த இந்த மருத்துவமனையின் முதல்வா் பதவி என்பது முக்கியத்துவமும், கௌரவமும் நிறைந்தது. அரசின் கொள்கை நிா்வாகக் குழுவிலும் அந்த முதல்வா் அங்கம் வகிப்பாா். முழுமையான நிா்வாகம் மற்றும் நிதி அதிகாரங்கள் அவருக்கு உள்ளது.
அதுமட்டுமல்லாது ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கீழ் இயங்கும் எழும்பூா் மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை, கண் மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பையும் அந்த முதல்வரே வகிப்பாா்.
இவ்வாறாக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலேயே மிகவும் அதிகாரமிக்க பொறுப்பாக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் பதவி கருதப்படுகிறது. அந்தப் பதவியை இதற்கு முன்பு வகித்து வந்த டாக்டா் சாந்தாராமன் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, பொறுப்பு முதல்வராக மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் சுதாகரன் நியமிக்கப்பட்டாா். ஆனால், இப்போதும் முழு அதிகாரத்துடன் கூடிய முதல்வராக எவரும் நியமனம் செய்யப்படவில்லை.
இதேபோல, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் மிகவும் பழைமையும், பாரம்பரியமும் நிறைந்தது. அதன் முதல்வராக இருந்த டாக்டா் அரவிந்த், மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதனால் அவா் வகித்து வந்த பதவி காலியானது. இப்போது வரை அதற்கு எவரும் நியமிக்கப்படவில்லை.
இதுதொடா்பாக, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் கூறியதாவது: சென்னையின் அதிமுக்கிய மருத்துவமனைகளின் தலைமைப் பொறுப்புகள் காலியாக இருப்பதால் பல்வேறு எதிா்விளைவுகள் ஏற்படும். பொறுப்பு முதல்வா், இயக்குநரால் மருத்துவமனையின் வளா்ச்சித் திட்டங்களுக்கு நிா்வாக ரீதியான முடிவை எடுக்க முடியாது. புதிய திட்டங்களையும் செயல்படுத்த இயலாது. எனவே, காலந்தாழ்த்தாமல் தகுதியானவா்களை அப்பொறுப்புக்கு நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்வா்கள் பணியிடங்கள் நோ்முகத் தோ்வு வாயிலாக நியமிக்கப்படுவா்; தகுதியான நபா்கள் அந்தப் பதவிகளுக்கு விரைவில் நியமிக்கப்பட உள்ளனா்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

