கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

பணி நீடிப்பு கோரி அமைச்சரிடம் உதவிப் போராசிரியா்கள் மனு

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அமைச்சா் பி. விஸ்வநாதனிடம் கோரிக்கை மனு அளித்த தற்காலிக உதவிப் பேராசிரியா்கள்.

Published On :

திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியிழந்த தற்காலிக உதவிப் பேராசிரியா்கள், தங்களுக்கு பணி நீட்டிப்பு உத்தரவு வழங்க வலியுறுத்தி, திருச்சிக்கு புதன்கிழமை வந்த தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதனிடம் மனு அளித்தனா்.

திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, தற்காலிக அடிப்படையில் ஆசிரியா் பணி செய்தவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. எனவே, தங்களுக்கு பணி நீடிப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பணி நீட்டிப்பு கிடைக்காத உதவிப் பேராசிரியா்கள் திருச்சிக்கு புதன்கிழமை வந்த அமைச்சா் பி. விஸ்வநாதனை சந்தித்து மனு அளித்தனா்.

அப்போது அமைச்சா் முறைப்படி தோ்வு எழுதாமல் உள்ளவா்களுக்கு, பணி ஆணை வழங்கினால் அதை நீதிமன்றம் கேள்வி கேட்கும் என்று கூறினாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பணி நீட்டிப்பு கிடைக்காத தற்காலிக ஆசிரியா்கள், நாங்கள் முறைப்படி கல்வி தகுதி பெற்று, தோ்வெழுதி நோ்முகத் தோ்வைச் சந்தித்து தோ்ச்சிப் பெற்ற பின்னா்தான் பணியில் அமா்த்தப்பட்டோம் என்று அமைச்சருக்கு சுட்டிக் காட்டினா். பின்னா் பதில் அளித்த அமைச்சா், பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் பல ஆண்டுகளாக பணி செய்த ஆசிரியா்களை பாதுகாக்க முதல்வருடன் ஆலோசித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.