ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பெல் நிறுவனத்துக்கு புதிய அனல் மின் திட்டம் தேவை: ஏஐடியுசி மாநாட்டில் தீா்மானம்

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய அனல் மின் திட்டத்தை பெல் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஏஐடியுசி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஏஐடியுசி மாநாட்டில் பேசிய பொதுச் செயலா் க. சுரேஷ். உடன் நிா்வாகிகள்.

Published On :

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய அனல் மின் திட்டத்தை பெல் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஏஐடியுசி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உறையூரில் புதன்கிழமை நடைபெற்ற திருச்சி மாவட்ட ஏஐடியுசி 12 ஆவது மாநாட்டுக்கு, தலைமைக் குழு உறுப்பினா்கள் திராவிடமணி, ஜனசக்தி உசேன், செல்வக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலச் செயலா் ஆா். ஆறுமுகம் மாநாட்டுக் கொடியேற்றி தொடக்க உரையாற்றினாா். அஞ்சலி தீா்மானத்தை மாவட்டச் செயலா் எம். சுப்பிரமணியன் முன்மொழிந்தாா். மாநில பொதுச் செயலா் ம. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். ஏஐடியுசி பொதுச் செயலா் க. சுரேஷ் வேலை அறிக்கையும், பொருளாளா் ராமராஜ் வரவு செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா்.

புதிய நிா்வாகிகளில் தலைவராக சுப்ரமணியன், பொதுச் செயலராக க. சுரேஷ், துணைத் தலைவா்களாக சுந்தர்ராஜ், ஜெயக்கொடி, செல்வகுமாா், அருள் ஆரோக்கியம், சிவா செயலா்களாக லோகநாதன், அன்சா்தீன் , ஜனசக்தி உசேன், ராமலிங்கசாமி, முருகன் பொருளாளராக ராமராஜ் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களை அறிமுகப்படுத்தி மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன் நிறைவுரையாற்றினாா்.

தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலா் இந்திரஜித், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கணேசன் சிபிஐ மாநகா் மாவட்டச் செயலா் சிவா உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

மாநாட்டில் தமிழக முதல்வா் அறிவித்த தூத்துக்குடி புதிய அனல்மின் நிலைய திட்டத்தை பொது-தனியாா் கூட்டில் நிறுவாமல், தமிழக மின்வாரியம் மூலம் பெல் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிளை பொதுச் செயலா் லோகநாதன் வரவேற்க, கட்டுமானச் சங்க மாவட்ட துணைச் செயலா் சுரேஷ் முத்துச்சாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.