தமிழகத்திற்கு எப்பொழுது வருவாள் "ஆஷா'?: எஸ்.கார்த்திகேயன்

 திருப்பத்தூர், ஜூன் 8: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியமர்த்தப்படும் ஆஷாக்கள், தமிழகத்தில் இதுவரை பணியமர்த்தப்படவில்லை.  ஆஷா என்பவர் பெண் சுகாதார தன்னார்வத் தொண்டர். இப்பதவி கிராம
Updated on
1 min read

 திருப்பத்தூர், ஜூன் 8: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியமர்த்தப்படும் ஆஷாக்கள், தமிழகத்தில் இதுவரை பணியமர்த்தப்படவில்லை.

 ஆஷா என்பவர் பெண் சுகாதார தன்னார்வத் தொண்டர். இப்பதவி கிராமப்புறங்களில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தேசிய கிராமப்புற சுகாதார இயக்ககம் மூலம் 12 ஏப்ரல் 2005 அன்று 18 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 கிராமத்தில் வசிக்கும் 1000 பேருக்கு ஒரு ஆஷா நியமிக்கப்படுகிறார். மலைக்கிராமப் பகுதிகளில் 250 பேருக்கு ஒரு ஆஷா நியமிக்கப்படுகிறார்.

 அதே கிராமத்தில் வசிக்கும், திருமணமான பெண்கள், விதவைகள், விவாகரத்தான, 25 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட, 8-ம் வகுப்பு வரை கல்வி பயின்ற பெண்கள் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 இவர்களின் முக்கியப் பணி அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்களுடன் சேர்ந்து சுகாதாரப் பதிவேடுகளை தினமும் எழுதி பராமரிக்க உதவ வேண்டும்.

 மேலும் தமிழக அரசின் சுகாதார திட்டங்களை மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். மாதம் ஒருமுறை சுகாதார தினமாகக் கருதி அங்கன்வாடி பணியாளர்களுடன் சேர்ந்து வளர்இளம் பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை வரவழைத்து சுதாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வளர்இளம் பெண்களுக்கு இரும்புச் சத்தின் முக்கியத்துவம் குறித்தும், தாய்மார்களுக்கு சத்துணவு மற்றும் குழந்தைகளுக்கான இணை உணவு குறித்தும், கர்ப்பிணித் தார்மார்களுக்கு கவனமாகக் குழந்தையைப் பெற்றெடுக்கும் முறை குறித்தும், பொது சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 ஆந்திரம், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஷ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இதுவரை இந்தியா முழுவதும் 6,89,916 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. இப்பதவியை ஏற்படுத்தி பல ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாமல் மெத்தனம் காட்டி வருகிறது அரசு.

 இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைத் செயலர் வி.கே. சுப்புராஜ் கூறியது:

 தமிழகத்தைப் பொருத்தவரை ஆஷா-க்களின் சேவை தேவைப்படவில்லை. மலைகிராமங்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். அத்தகைய இடங்களில் ஆஷா-க்களை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com