வேலூர், மார்ச் 6: இளைஞர் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள் பதவியைக் கைப்பற்றும் நோக்கில், தனது ஆதரவாளர்களை கிளைத் தேர்தலில் களம் இறக்கிய காங்கிரஸ் கட்சியினரால், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலிலும் கோஷ்டி மோதல்கள் அரங்கேறுகின்றன.
அரசியல் பின்னணியற்ற புதிய இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு ஈர்க்கும் வகையில், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர்களைச் சந்தித்தார் ராகுல்காந்தி. அதன் பிறகு நடந்த உறுப்பினர்கள் சேர்க்கையின்போது ஏராளமானோர் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
குஜராத், பஞ்சாப், புதுவை, டையு-டாமன் பகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில், கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி, மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்களுக்கே பொதுத் தேர்தலின்போதும் முன்னுரிமை அளித்தார் ராகுல்காந்தி. இவர்களில் பலர் வெற்றி பெற்றனர்.
இதே பாணியில் தமிழகத்திலும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் குறுக்கீடு அதிகம் இருந்தது. தனது ஆதரவு பலத்தை அதிகரிக்க, சொந்தச் செலவில், அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதிலேயே ஏராளமான போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. இதையொட்டி, கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களைத் தங்களது பக்கம் ஈர்க்கும் பணியை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் செய்யத் தொடங்கினர். இதனால், ஒரே உறுப்பினர் பெயரில் 4 முதல் 5 மனுக்கள் வரையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட விரும்பும் தனி நபர், நேரடியாக மனு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், மொத்தமாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கிளைத் தேர்தலில் அதிக வாக்கு பெறுபவர் தலைவர், அடுத்த இடத்தைப் பிடிப்பவர் துணைத் தலைவர், இட ஒதுக்கீடு அடிப்படையில்
சிறுபான்மை-பிற்பட்டோர், எஸ்சி.எஸ்டி பிரிவினர், பெண்கள் என 3 பொதுச் செயலர்கள் பொறுப்புகள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதில் வெற்றி பெறுவோரே, சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு வாக்களிக்க முடியும்.
எனவே, இதில் தங்களது ஆதரவாளர்களை வெற்றி பெறச் செய்ய காங்கிரஸில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும் களத்தில் பணியாற்றி வருகின்றன. இதன் மூலம், சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்களாகத் தங்களது வாரிசுகள், ஆதரவாளர்களை வெற்றி பெறச் செய்ய முடியும். அதன் மூலமே, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, அரசியல் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் இங்குள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதனால், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடாத தொகுதிகளில், போலி சாதிச் சான்றிதழ் அளித்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மனு பரிசீலனையின்போது, பல மனுக்கள் இவ்வாறு கண்டறியப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. கிராம பகுதிகளில் வசிக்கும் பலர், நகர்ப் பகுதிகளில் வசிப்பதாக காட்டப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் தங்களது ஆதரவாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்று காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அரக்கோணம் பகுதியில் அண்மையில் மனு தாக்கலின்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக, மாற்றுக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது குடும்ப அங்கத்தினர் மனு தாக்கல் செய்ய ஆதரவாக வந்த ரத்த உறவுகள்.
ராகுல்காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்டு, இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்களாகச் சேர்ந்த இளைஞர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளின் தலையீட்டாலும், பணம், ஆள் பலத்தாலும், மீண்டும் கட்சியைவிட்டு ஒதுங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் வெளிப்படையாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

