குடியாத்தம், ஜன. 1: வேலூர் மேற்கு மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், கே.டி. மார்கபந்து முதலியார் ஆகியோர் தலைமை வகித்தனர். புலவர் டி. சங்கரலிங்கம், ஆடிட்டர் சி.ஏ. ரவிச்சந்தர் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
புதிய நிர்வாகிகள்: மாவட்டத் தலைவர்- முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி. மணவாளன், மாவட்டச் செயலர்- குடியாத்தம் ஆசிரியர் எம். தண்டபாணி, மாவட்ட பொருளாளர்- ஆம்பூர் கே. ஏகாம்பரம், மாநில செயற்குழு உறுப்பினர்கள்- ஏ.கே.சி. சுந்தரவேல், ஜி. சீனிவாசன், சி.என். தட்சிணாமூர்த்தி. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் வேலூர் ஆபிசர்ஸ் லைனுக்கு அண்ணாவின் பெயரையும், லாங்கு பஜார் தெருவுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் பெயரையும் சூட்டி செங்குந்தர் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. சங்க நிர்வாகி எம்.ஏ. சிவக்குமாரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.