வேலூர், நவ. 18: வேலூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கான புதிய கட்டண விவரத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் மண்டல அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, இப்போது வசூலிக்கப்படும் புதிய கட்டணம் (பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்):
சென்னை எக்ஸ்பிரஸ் பேருந்து- ரூ. 81 (46), அல்ட்ரா டீலக்ஸ்- 130 (85), ஏ.சி.- 160 (145).
பெங்களூர்- ரூ.141 (96), காஞ்சிபுரம்- ரூ. 41 (23.50), கல்பாக்கம்- ரூ. 82 (46), ஒடுக்கத்தூர்- ரூ. 17 (11), திருப்பதி- ரூ. 70 (58), சித்தூர்- ரூ. 24 (18), திருத்தணி- ரூ. 34 (22.50), சேலம்- ரூ. 123 (76), திருப்பத்தூர்- ரூ. 51 (29). இவை அனைத்தும் எக்ஸ்பிரஸ் பேருந்து கட்டணங்கள்.
சாதாரண கட்டணம்:
வேலூரிலிருந்து மற்ற ஊர்களுக்கு வசூலிக்கப்படும் சாதாரண கட்டணங்கள் விவரம்:
திருப்பத்தூர்- ரூ. 39 (25.50), ஜோலார்பேட்டை- ரூ. 36 (24), வாணியம்பாடி- ரூ. 29 (19), ஆம்பூர்- ரூ. 22 (15), பள்ளிகொண்டா 11 (7), குடியாத்தம்- 14 (9.50), பேர்ணாம்பட்டு- ரூ. 22 (15), ஆர்க்காடு- ரூ. 11 (6.50), வாலாஜா- ரூ. 14 (8.50), சோளிங்கர்- 24 (15).
விரைவு பேருந்து கட்டணங்கள்:
வேலூரிலிருந்து விரைவு பேருந்து கட்டணங்கள் திருச்சி- ரூ. 215 (175), மதுரை- ரூ. 310 (240), திருநெல்வேலி- ரூ. 455 (325), நாகர்கோவில்- ரூ. 480 (365), கன்னியாகுமரி- ரூ. 490 (375), மார்த்தாண்டம்- ரூ. 490 (380), திருவனந்தபுரம்- ரூ. 525 (415), தூத்துக்குடி- ரூ. 410 (310), செங்கோட்டை- ரூ. 430 (330), தஞ்சாவூர்- ரூ. 200 (230).
ஆந்திர அரசு பஸ்களில் செல்ல பயணிகள் ஆர்வம்!
லூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து திருப்பதி, சித்தூருக்கு செல்வோர் ஆந்திர அரசு பஸ்களில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டினர்.
வேலூரிலிருந்து திருப்பதிக்கு தமிழக அரசு பஸ்ஸில் கட்டணம் ரூ. 70. ஆனால், ஆந்திர அரசு அரசு பஸ்ஸில் கட்டணம் ரூ. 66.
வேலூரிருந்து சித்தூருக்கு தமிழக அரசு பஸ்களில் கட்டணம் ரூ. 24. ஆனால், ஆந்திர பஸ்களில் கட்டணம் ரூ. 20.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.