வாலாஜாபேட்டை, செப்.24: கவிப்பித்தன் எழுதிய "ஊர்ப்பிடாரி' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு பெல் நிறுவன முதுநிலை மேலாளர் கவிஞர் முகில் தலைமை
தாங்கினார்.
நூலை விஜடி வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் கமலாலயன், டெக்கான் மெட்ரிக். பள்ளி தாளாளர் பொன்னை சி.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராணி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.