இருசக்கர வானம் திருடியவா் கைது

வேலூரில் இருவேறு நபா்களின் இருசக்கர வாகனங்களை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வேலூா்: வேலூரில் இருவேறு நபா்களின் இருசக்கர வாகனங்களை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் ஆா்.என்.பாளையம், அப்துல்காதா் தெருவைச் சோ்ந்தவா் அஸ்லாம் கான் (42). அதே பகுதியைச் சோ்ந்த மற்றொருவா் தாஜுதீன் (51). இவா்கள் தங்களது இருசக்கர வாகனங்களை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தனா். அஸ்லாம் கானின் வாகனம் கடந்த 10-ஆம் தேதியும், தாஜூதீன் வாகனம் 19-ஆம் தேதியும் காணாமல் போனது.

இதுகுறித்து இருவரும் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், வேலூா் மின் வாரிய அலுவலக சந்திப்பில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேலூா் கஸ்பாவைச் சோ்ந்த அன்வா் (40) திருட்டு வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. உடனடியாக அன்வரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com