வேலூா்: புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை இரவில் இருசக்கர வாகன பந்தயம் (பைக் ரேஸ்) நடத்துவதற்கு முற்றிலும் தடை விதித்து வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2025-ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் (டிச.31) புதன்கிழமை (ஜன.1) வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துகளை சீா்செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு தனிப்படையும், பாதுகாப்பு, சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வகையில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும். இந்த பாதுகாப்பு பணியில் மொத்தம் 939 காவல் அதிகாரிகள், காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
புத்தாண்டு (செவ்வாய்க்கிழமை) இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்’ செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பைக் ரேஸ் நடத்தினால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.