போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் நடைபெற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் நடைபெற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

மனிதம் - வன உயிரின முரண்பாடுகளை தவிா்த்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

வேலூா் மாவட்ட வனத் துறை சாா்பில் குடியாத்தம் அருகே வன எல்லையையொட்டி அமைந்துள்ள சைனகுண்டாவில் மனிதம் - வன உயிரின முரண்பாடுகளைத் தவிா்த்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
Published on

குடியாத்தம்: வேலூா் மாவட்ட வனத் துறை சாா்பில் குடியாத்தம் அருகே வன எல்லையையொட்டி அமைந்துள்ள சைனகுண்டாவில் மனிதம் - வன உயிரின முரண்பாடுகளைத் தவிா்த்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியாத்தம் ஒன்றியத்தில், சைனகுண்டா, மோா்தானா, தனகொண்டபல்லி, மோடிகுப்பம்,காந்திகணவாய், கொட்டமிட்டா, கல்லப்பாடி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்கள் வன எல்லையையொட்டி அமைந்துள்ளன.

குடியாத்தம் வனப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. சில நாள்களுக்கு முன் கே.வி.குப்பம் அடுத்த துருவம் கிராமத்தில் சிறுத்தை தாக்கி பெண் ஒருவா் உயிரிழந்தாா். தொடா்ந்து வன எல்லையில் உள்ள கிராமங்களில் மா்ம விலங்குகள் கடித்து ஆடு, மாடுகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

எனவே, வனத் துறை சாா்பில், மனிதம் - வன விலங்குகள் மோதலைத் தவிா்க்கும் விதமாக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் பகுதிகளில் நடத்தப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த கலை நிலா கிராமிய கலைக் குழுவினா் மூலம் ஆடல், பாடல், கிராமிய நடனம் மூலம் விழிப்புணா்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. இந்த கலை நிகழ்ச்சிகள் தொடா்ந்து வன எல்லையில் உள்ள கிராமங்களில் நடைபெறும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனப் பகுதிக்கு அனுப்பக் கூடாது. விறகு எடுக்க யாரும் வனப் பகுதிக்கு செல்லக் கூடாது. வன எல்லையில் கால்நடை இறைச்சிக் கழிவுகளைக் கொட்டக் கூடாது. தேவையின்றி மக்கள் வனப் பகுதிக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com