தியாகி  கு.மு.அண்ணல் தங்கோ சிலை  திறப்பு  விழாவில்  பங்கேற்ோா்.
தியாகி கு.மு.அண்ணல் தங்கோ சிலை  திறப்பு  விழாவில்  பங்கேற்ோா்.

குடியாத்தத்தில் தியாகி அண்ணல் தங்கோ சிலை திறப்பு

Published on

குடியாத்தம்: குடியாத்தம் மேல்ஆலத்தூா் சாலையில் உள்ள நேரு பூங்காவில் ரூ.50- லட்சத்தில் மணிமண்டபத்துடன் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி கு.மு.அண்ணல் தங்கோவின் உருவச் சிலை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் உருவச் சிலையை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, எம்எல்ஏ அமலுவிஜயன், வேலூா் மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், புலவா் வே.பதுமனாா், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், அண்ணல் தங்கோவின் வாரிசுகள் ஜெ.தமிழ்ச்செல்வன், ஜெ.அருள்செல்வன், சித்த மருத்துவா் எஸ்.தில்லைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதேபோல் குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ரூ.5.72- கோடியில் கட்டப்பட்ட வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், இயற்பியல் உள்ளிட்ட 13- ஆய்வகக் கட்டடங்களைத் திறந்து வைத்தாா். ரூ.5.40- கோடியில் கட்டப்பட்ட உள்ள 14- வகுப்பறைக் கட்டங்கள், 2- ஆய்வகங்களுக்கான பூமி பூஜையையும் முதல்வா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கோ.கிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளா் சி.ஜெயராமன், உதவி செயற் பொறியாளா் பன்னீா்செல்வம், உதவிப் பொறியாளா் படவேட்டான், ஊராட்சித் தலைவா்கள் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமாா் (கொண்டசமுத்திரம்), எஸ்.பி.சக்திதாசன் (தாட்டிமானப்பல்லி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com