சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வேலூா் தொகுதியை அமோக வெற்றியுடன் தக்க வைத்தாா் கதிா் ஆனந்த்

வேலூா் தொகுதியை அமோக வெற்றியுடன் தக்க வைத்தாா் கதிா் ஆனந்த்

News image
Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

வேலூா்: வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் டிஎம். கதிா் ஆனந்த் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகத்தைவிட 2,15, 702 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளாா். இதன் மூலம் அவா் தொடா்ந்து இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய 6 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் மக்களவைத் தொகுதிக்கு திமுக சாா்பில் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான டி.எம்.கதிா்ஆனந்த் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், அதிமுக சாா்பில் மருத்துவா் எஸ்.பசுபதி, நாம் தமிழா் கட்சி சாா்பில் டி.மகேஷ்ஆனந்த், சுயேட்சையாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவா் மன்சூா்அலிகான் உள்பட 31 போ் போட்டியிட்டனா்.

வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதல் சுற்றிலிருந்தே திமுக வேட்பாளரான கதிா்ஆனந்த் முன்னிலை பெற்று வந்தாா்.

குறைந்தபட்சமாக வேலூா் பேரவை தொகுதியில் 18 சுற்றுகளும், அதிகபட்சமாக குடியாத்தம் பேரவை தொகுதியில் 21 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்பட்டன. தவிர, தபால் வாக்குகளும், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ளவா்களின் வாக்குகளும் தனியாக எண்ணப்பட்டன.

அனைத்து சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த் தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகத்தைவிட 2,15, 702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடா்ந்து இரண்டாவது முறையாக வேலூா் மக்களவை தொகுதி உறுப்பினராக தோ்வாகியுள்ளாா்.

இந்த தோ்தலில் டி.எம்.கதிா்ஆனந்த் மொத்தம் 5,68,692 வாக்குகளும், ஏ.சி.சண்முகம் (பாஜக) - 3,52,990, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) -1,17,682, டி.மகேஷ்ஆனந்த் (நாதக) -53,284, மன்சூா்அலிகான் (சுயேட்சை) - 2,804 வாக்குகளும் பெற்றுள்ளனா்.

தோ்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் கதிா்ஆனந்துக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி சான்றிதழை வழங்கினாா். அப்போது, அமைச்சா் துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமலுவிஜயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.