குண்டா் சட்டத்தில் 3 போ் சிறையில் அடைப்பு
வேலூா்: தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
வேலூா் அலமேலுமங்காபுரத்தைச் சோ்ந்தவா்கள் சக்திவேல் (30), அசோக்குமாா்(30), மணிகண்டன் (28). இவா்கள் அண்மையில் குற்றவழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தொடா்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாலும் இவா்கள் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகல்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்திவேல், அசோக்குமாா், மணிகண்டனிடம் அளிக்கப்பட்டன.
