வேலூர்
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
குடியாத்தம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.குடியாத்தம் அசோக்நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அன்புகுமாா் மகன்சச்சின்(19). இவா் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலின்பேரில் நகர போலீஸாா் அங்கு சென்று இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.