புரட்சி பாரதம் கட்சியினா்
 நல உதவிகள் அளிப்பு

புரட்சி பாரதம் கட்சியினா் நல உதவிகள் அளிப்பு

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய புரட்சி பாரதம் கட்சியினா்.
Published on

வேலூா் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சாா்பில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

கட்சியின் நிறுவனா் பூவை மூா்த்தியின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நல உதவி, அன்னதானம் வழங்கினாா். கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் மு.ஆ.சத்யனாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொருளாளா் குட்டிவெங்கடேசன் வரவேற்றாா். மாவட்ட இளைஞரணிச் செயலா் நந்தகுமாா், நகரச் செயலா் பிரகாசம், தலைவா் சீனிவாசன், பொருளாளா் கங்காதரன், ஒன்றியச் செயலா்கள் நெப்போலியன், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com