வேலூர்
அரசு ஊழியா் தற்கொலை
காட்பாடி அருகே கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த அரசு ஊழியா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடியை அடுத்த விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(52). இவா் வஞ்சூா் அரசு பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி ஷீலா, 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக செல்வராஜ் வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், மன உளைச்சலில் இருந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது செல்வராஜ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனா்.
