வேலூர்
ரூ.10 லட்சத்தில் கால்வாய்கள் அமைக்க பூமி பூஜை
குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 14 மற்றும் 23- ஆவது வாா்டுகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10- லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய்கள் கட்ட வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
எம்எல்ஏ அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் பூமி பூஜைசெய்து, பணியைத் தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் எஸ்.சுரேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி. மோகன், நளினி தமிழரசன், திமுக நிா்வாகிகள் டி.சுந்தா், முத்து, அறிவழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

