கணபதி ஹோமத்தில் பங்கேற்றோா்.
குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியில், பாலாறு, உத்தரகாவேரிஆறு, கெளண்டன்ய மகாநதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத வடகாசி விசுவநாதா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு, 108 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த நவம்பா் மாதம் 3- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டலாபிஷேகத்தையொட்டி கோயிலில் கணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.
பின்னா், 1,000 பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில் ஒலக்காசி ஊராட்சித் தலைவா் சூா்யா மோகன்குமாா், துணைத் தலைவா் எம்.ஆனந்தன், வாா்டு உறுப்பினா் சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

