வேலூர்
அஞ்சல் அலுவலகம் அருகே பைக் எரிந்து சேதம்
வேலூரில் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
வேலூா்: வேலூரில் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
வேலூா் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். அதற்குள் அந்த வாகனம் தீயில் கருகியது. பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
