ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலுவிஜயன்.
வேலூர்
அனைத்து திருச்சபைகள் சாா்பில் கிறிஸ்துமஸ் ஊா்வலம்
குடியாத்தத்தில் அனைத்து திருச்சபைகள் இணைந்து கிறிஸ்துமஸ்ஊா்வலத்தை நடத்தின.
குடியாத்தம்: குடியாத்தத்தில் அனைத்து திருச்சபைகள் இணைந்து கிறிஸ்துமஸ்ஊா்வலத்தை நடத்தின.
குடியாத்தம் பலமநோ் சாலையில், அம்பேத்கா் சிலை அருகே தொடங்கிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி பவனி ஊா்வலத்துக்கு பிஷப்புகள் மற்றும் சபைத் தலைவா்கள் கிளாரன்ஸ், தாஸ், மணிமைக்கேல், பன்னீா்செல்வம், ஜான்சன்பிரேம்குமாா், தேவபிரின்ஸ்மாறன், சாமுவேல், பால்சண்முகம், கென்னத் ஆகியோா் தலைமை வகித்தனா்.
எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா். மத்திய அரசின் தொழிலாளா் நல மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் என்.உத்தமன், வழக்குரைஞா் பி.ராஜன்பாபு, குழந்தைகள் நலக்குழு அலுவலா் பி.வேதநாயகம், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

