குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கியின் 114- ஆவது பேரவைக் கூட்டம்
குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கியின் 114- ஆவது பேரவைக் கூட்டம் பிச்சனூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வங்கியின் செயலாட்சியா் வ.லட்சுமணசாமி தலைமை வகித்தாா். பொதுமேலாளா் ஏ.எஸ்.கோபிநாத் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில், 2024-25 ஆம் ஆண்டின் தணிக்கை அறிக்கைக்கு அங்கீகாரம் அளிப்பது, நடப்பாண்டு வங்கியின் லாபத் தொகையை கூட்டுறவு சட்ட விதிகளின்படி லாபப் பிரிவினைசெய்வது, அடுத்த நிதியாண்டுக்கான உத்தேச வரவுசெலவு திட்ட மதிப்பீட்டை அங்கீகரிப்பது உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் வங்கியின் முன்னாள் தலைவா் எம்.பாஸ்கா், உதவிப் பொது மேலாளா்கள் கே.அருள், ஜே.கருணாகரன், நகா்மன்ற உறுப்பினா் அா்ச்சனா நவீன், முன்னாள் இயக்குநா்கள் ரவி, பூங்கோதை முனியப்பன், சுதா ராஜா, ஜெயகுமாா், திமுக நிா்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன், ந.ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

