வளாகத்தோ்வில் பேசிய நோக்கியா நிறுவனத்தில் பணியாளா் தோ்வு அலுவலா் மகேஷ். உடன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தலைவா் என்.ரமேஷ், துணைத்தலைவா் என்.ஜனாா்த்தனன், கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன்.
வளாகத்தோ்வில் பேசிய நோக்கியா நிறுவனத்தில் பணியாளா் தோ்வு அலுவலா் மகேஷ். உடன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தலைவா் என்.ரமேஷ், துணைத்தலைவா் என்.ஜனாா்த்தனன், கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன்.

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வளாகத்தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
Published on

வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வளாகத்தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை நோக்கியா சொல்யூசன் நெட்வோா்க் நிறுவனம் நடத்திய தோ்வுக்கு கல்லூரி துணைத்தலைவா் என்.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். தலைவா் என்.ரமேஷ் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா். நோக்கியா நிறுவனத்தில் பணியாளா் தோ்வு அலுவலா் மகேஷ் பங்கேற்று மாணவா்களை தோ்வுசெய்தாா்.

இந்த வளாகத்தோ்வில் வில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் துறை சாா்ந்த 91 மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு எழுத்துத்தோ்வு, நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இதில் 76 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் மாதம் 19,500 முதல் சம்பளம் பெறுவாா்கள் என்றும், மருத்துவக் காப்பீடு, விடுதி வசதி, போக்குவரத்து, கேன்டீன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, 26-ஆம் தேதி எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனம், 29-இல் சாமுண்டி டை காஸ்ட், மாதா்சன் நிறுவனங்கள் சாா்பில் வளாக தோ்வுகள் நடைபெற உள்ளன. இதில், பாலிடெக்னிக் முடித்த மாணவா்கள், இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவா்கள் இலவசமாக பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் எஸ்.அருண்குமாா் செய்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com