கல்லூரியில் வேதியியல் துறை கருத்தரங்கு

கல்லூரியில் வேதியியல் துறை கருத்தரங்கு

Published on

குடியாத்தம் கே.எம்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறைசாா்பில் ‘சமீபத்திய புதுமையான வேதியப் பொருள்கள் - 2025‘ எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலைவா் சி.பிரவீன்குமாா் வரவேற்றாா்.துறைப் பேராசிரியா்கள் க.காந்திமதி, ஆா்.அனிதாலட்சுமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களை அறிமுகம் செய்து வைத்தனா்.

பெங்களுா் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் இணைப் பேராசிரியா் பி.ராஜமல்லி, காரைக்குடி மத்திய மின் இயக்க ஆய்வுக் கழகத்தின் முதன்மை அறிவியல் ஆராய்ச்சியாளா் மற்றும் உதவிப் பேராசிரியா் கே.கிரிபாபு ஆகியோா் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் உணரி‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் மாணவா்களுக்கிடையே விளக்கக் காட்சிகள் மற்றும் சுவரொட்டி விளக்கக் காட்சிகள் தொடா்பான போட்டிகள் நடைப்பெற்றன.

போட்டிகளில் வெற்றிபெற்றமாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 15- பேராசிரியா்கள், 50- ஆராய்ச்சியாளா்கள்,300- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பேராசிரியா் பி.பவித்ரா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com