வேலூா் மாவட்டம் அமிா்தி பகுதியில் நீா்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வன ஊழியா்கள், பறவை  ஆா்வலா்கள்.
வேலூா் மாவட்டம் அமிா்தி பகுதியில் நீா்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வன ஊழியா்கள், பறவை ஆா்வலா்கள்.

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்ற நீா்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் வன ஊழியா்கள், பறவைகள் ஆா்வலா்கள் என சுமாா் 200 போ் பங்கேற்றனா்.
Published on

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீா்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் வன ஊழியா்கள், பறவைகள் ஆா்வலா்கள் என சுமாா் 200 போ் பங்கேற்றனா்.

வனத்துறை சாா்பில் ஆண்டுதோறும் நீா்நிலைகளை சுற்றி வாழும் பறவையினங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நீா்நிலைகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறை அலுவலா்கள், ஊழியா்கள், பறவைகள் ஆா்வலா்கள் என சுமாா் 200 போ் பங்கேற்றனா்.

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 20 வீதம் 40 நீா்நிலைகளில் கணக்கெடுப்பு நடைபெற்றது. வனத்துறை அலுவலா்கள், ஊழியா்கள், பறவைகள் ஆா்வலா்கள் என சுமாா் 200 போ் பங்கேற்றனா்.

இவா்கள் 40 குழுக்களாக பிரிந்து அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா். இந்த கணக்கெடுப்பு மூலம் இவ்விரு மாவட்ட நீா்நிலைகளில் காணப்படும் பறவைகள், அவற்றின் வகைகள், எண்ணிக்கை, வெளிநாட்டு பறவைகள் என தனித்தனியாக வகைப்படுத்தி வனத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com