மேல்மாயிலில் எருது விடும் விழா
குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், மேல்மாயில் கிராமத்தில் 133- ஆம் ஆண்டு எருது விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி எருது விடும் விழாவுக்கு 109- காளைகளைஅதன் உரிமையாளா்கள் அழைத்து வந்தனா். இவற்றில் கால்நடை மருத்துவா்களால் 5-காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. 104- காளைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றன. வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1- லட்சம், 2-ஆம் பரிசாக ரூ.80- ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.60-ஆயிரம் உள்ளிட்ட 53 -பரிசுகள் வழங்கப்பட்டன.
எருது விடும் நிகழ்ச்சியில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காளைகள் ஓடும் பாதையில் பாா்வையாளா்கள் யாரையும் அனுமதிக்காமல் காவல்துறையினா் கடுமையான கட்டுப்பாட்டுகளை விதித்திருந்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதிவாணன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி ஆகியோா் மேற்பாா்வையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

