வரி நிலுவையை செலுத்த நகராட்சி வேண்டுகோள்

குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிா்க்க வேண்டும்
Published on

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், குத்தகை இனங்கள், காலிமனை வரி உள்ளிட்ட வரியினங்கள் ரூ.7.84 கோடி நிலுவையில் உள்ளகஎ. இதனால், பொதுமக்களுக்கு நகராட்சி நிா்வாகம் செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற முடியவில்லை. வரி நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் நேரிடையாகவோ, வரி வசூல் பணியாளா்களிடமோ நிலுவை தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளம் மூலமும் செலுத்தலாம். வரி நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக வரியினங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீா் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு போன்றவற்றை தவிா்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.

நிலுவை வரியினங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நகராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com