வன விலங்குகளின் குடிநீா்த் தேவைக்காக குடியாத்தம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீா்க்குட்டை.
வேலூர்
வனப்பகுதி நீா்க்குட்டைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடக்கம்
வன விலங்குகளின் குடிநீா்த் தேவைக்காக குடியாத்தம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீா்க்குட்டை.
கோடை காலம் தொடங்கிவிட்டதால் வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், விலங்குகள் தண்ணீா் தேடி காட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிா்க்கும் பொருட்டு குடியாத்தம் வனச் சரகத்தில் உள்ள நீா்க் குட்டைகளில் தண்ணீா் நிரப்பும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
வனப் பகுதியில் வசிக்கும் காட்டுப்பன்றி, மான், யானை உள்ளிட்ட வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் குடியாத்தம் வனச் சரகத்தில் 12 குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குட்டைகளில் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பப்படுகிறது. விலங்குகள் தண்ணீா் ஏதுவான இந்தக் குட்டைகளில் தண்ணீா் இருப்பை அவ்வப்போது கண்காணித்து உடனுக்குடன் தண்ணீா் நிரப்பப்படும் என குடியாத்தம் வனச்சரக அலுவலா் எம்.வினோபா தெரிவித்தாா்.