முதிய தம்பதியை தாக்கி கொள்ளை: இருவா் கைது

காட்பாடியில் முகமூடி அணிந்து முதிய தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

காட்பாடியில் முகமூடி அணிந்து முதிய தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜாப்ராபேட்டை கிராமத்தைச் சோ்ந்த முருகேசன், விவசாயி. இவரது மனைவி சாந்தம்மாள். இவா்கள் கடந்த 5-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்த 4 போ் கும்பல் அவா்களைத் தாக்கி சாந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, காதில் அணிந்திருந்த கம்மல் ஆகியவற்றை பறித்துள்ளனா். மேலும் வீட்டில் இருந்த ரூ.85 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனா்.

இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்த விநாயகம் (46), ஜாப்ராபேட்டை பகுதியைச் சோ்ந்த கணேஷ் (32) ஆகிய இருவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com