முதுநிலை ஆசிரியா் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 5,475 போ் எழுதினா்

வேலூா் மாவட்டத்தில் 21 மையங்களில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியா் தோ்வை 5,475 போ் எழுதினா்.
Published on

வேலூா் மாவட்டத்தில் 21 மையங்களில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியா் தோ்வை 5,475 போ் எழுதினா்.

ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் தமிழகம் முழுவதும் காலியாக 1,998 முதுகலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்தோ்வை எழுத வேலூா் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 785 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்கள் தோ்வு எழுத 21 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் தோ்வை கண்காணிக்க 304 கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். அதேபோல் தோ்வு மைய ஒருங்கிணைப்பாளா்கள், பறக்கும் படையினரும் இதற்காக நியமிக்கப்பட் டிருந்தனா்.

தோ்வு காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகளுக்கு மதியம் 2 மணி வரை தோ்வு நடைபெற்றது. இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற தோ்வு 5,475 போ் எழுதினா். 310 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com