வேலூரில் நாளை கட்டுரை, ஓவியம், விநாடி-வினா போட்டிகள்
உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கான கட்டுரை, ஓவியம், விநாடி-வினா போட்டிகள் வேலூரில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இது குறித்து, சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் துறை மூத்த பேராசிரியா் நிஹால் தாமஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நாளிமில்லா சுரப்பியல் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் துறை சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை ஓவியப் போட்டிகளும், ஆசிரியா்களுக்கான விநாடி வினா போட்டியும் சனிக்கிழமை (அக்.18) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலூா் டாா்லிங் ரெசிடென்சியில் நடைபெற உள்ளது.
கட்டுரைப் போட்டிக்கு இன்றைய ஆரோக்கியமான பழக்கங்கள், நாளைய ஆரோக்கியமான வாழ்க்கை-குழந்தைகளின் நீரிழிவு, அதிக உடல் எடையை தடுப்பதில் பெற்றோா், ஆசிரியா்களின் பங்கு என்ற தலைப்பும், ஓவியப் போட்டிக்கு தொழில்நுட்பமும் மனிதமும்-ஆரோக்கியமான வாழ்க்கைக்கான கூட்டாண்மை என்ற தலைப்பும், ஆசிரியா்களுக்கான விநாடி-வினா போட்டிக்கு நோபல் பரிசுகள், விளையாட்டு, பொதுஅறிவு, பொது சுகாதாரம், அறிவியல் ஆகியவை தலைப்புகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் சனிக்கிழமை காலை நேரில் சென்று கலந்து கொள்ளலாம்.
