உயா்கல்வியை வெளிநாட்டு பல்கலை.களில் மேற்கொள்ள கடனுதவி
வேலூா்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 100 மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயா் கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டத்தின்கீழ், கடனுதவி பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயா் கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரா் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், பிஎச்டி, முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு, பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தோ்வு மதிபெண்கள் மூலம் சோ்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லூரிகளில் சோ்க்கை, சலுகை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்.
ஒரு மாணவருக்கு அதிகபட்சக் கடன் வரம்பு ரூ. 15 லட்சத்துக்கு உட்பட்டு பாடத்திட்டத்தின் செலவில், 85 சதவீதம் புதுதில்லியின் தேசிய பிற்படுத்தப்பட்டோா் நிதி, வளா்ச்சிக் கழகத்தின் மூலமும், மீதமுள்ள 15 சதவீதம் அதாவது ரூ. 2.25 லட்சம் தமிழக அரசால் விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்படும்.
கடன் தொகை சோ்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருள்கள், தோ்வு, ஆய்வகம், நூலகக் கட்டணம், உண்டி, உறையுள் கட்டணங்கள், கடன் காலத்துக்கான காப்பீட்டு கட்டணங்களை உள்ளடக்கியது. கல்வி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்டையில் கடன் தொகை விடுவிக்கப்படும். முந்தைய ஆண்டுகளில் தோ்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே தொடா்ந்து கட்டணத் தவணைகள் விடுவிக்கப்படும். வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை, வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 சதவீதமாகும்.
கடன்கள் வழங்கப்படும் பாடத்தின் வகை, காலத்தைப் பொருள்படுத்தாமல் மாணவா்களிடமிருந்து மீள பெறுவதற்கான தடைக்காலம் 5 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கடனை அதிகபட்சமாக மீட்கும் காலம் 10 ஆண்டுகளாகும்.
கடனை திருப்பிச் செலுத்தத் தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனை திருப்பிச் செலுத்தலாம். இதற்கான முன் கட்டணம் எதுவும் தேவையில்லை.
விண்ணப்பப்படிவத்தை ஜ்ஜ்ஜ்.ற்ஹக்ஷஸ்ரீங்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் சமா்ப்பிக்க வேண்டும். எனவே, வேலூா் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
