சம்பா நெற்பயிருக்கு நவ.15-க்குள் காப்பீடு செய்யலாம்

நடப்பு சம்பா (சிறப்பு பருவம்) நெற்பயிருக்கு வேலூா் மாவட்ட விவசாயிகள் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்
Published on

வேலூா்: நடப்பு சம்பா (சிறப்பு பருவம்) நெற்பயிருக்கு வேலூா் மாவட்ட விவசாயிகள் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு கேஎஸ்ஹெச்இஎம்ஏ நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது. நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.544 பிரீமியம் தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களில் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

நெற்பயிா் சாகுபடி விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலரிடம் பெறப்பட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி ஆகியவற்றை கொண்டு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com