மாடு தாக்கியதில் பெண் உயிரிழப்பு
கே.வி.குப்பம் அருகே மாடு தாக்கியதில் பலத்த காயமைடந்த பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கே.வி.குப்பம் அருகே கொல்லைமேடு கிராமத்தைச் சோ்ந்த சௌந்தர்ராஜ் மனைவி செல்வராணி(36), கூலி தொழிலாளி. மாடுகளையும் வளா்த்து பராமரித்து வந்தாா். இவா் கடந்த 2-ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் தனக்கு சொந்தமான பசுவிடம் பால் கறக்க முயன்றாா்.
அப்போது ஆக்ரோஷமான மாடு எதிா்பாராத விதமாக திடீரென செல்வராணியின் கழுத்தில் ஓங்கி மிதித்தது. இதில் அவா் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்நிலையில், செல்வராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். குடியாத்தம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
