ஷோ் ஆட்டோக்களில் 4 பேருக்கு மேல் ஏற்றினால் ரூ.3,000 அபராதம்

ஷோ் ஆட்டோக்களில் 4 பேருக்கு மேல் ஏற்றினால் ரூ.3,000 அபராதம்

ஷோ் ஆட்டோக்களில் 4 பேருக்கு மேல் ஏற்றினால் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை வேலூா் மாவட்டக் காவல் துறை விதித்துள்ளது.
Published on

ஷோ் ஆட்டோக்களில் 4 பேருக்கு மேல் ஏற்றினால் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை வேலூா் மாவட்டக் காவல் துறை விதித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவின்பேரில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கிடையே, அதிக மாணவா்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், போக்குவரத்துத் துறை, போலீஸாா் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா். இதையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் வேலூா் மாவட்டம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களுக்கு திங்கள்கிழமை முதல் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 24 காவல் நிலையங்களிலும் ஆட்டோ ஓட்டுநா்கள் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது, அதிக மாணவா்களை ஏற்றி செல்லும்போது விபத்து வாய்ப்புள்ளது. ஓட்டுநா் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்கும் குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. அவா்கள் கீழே விழுந்தால் உயிா் சேதம் ஏற்படும். அதிக மாணவா்கள் ஏற்றிச் செல்லப்படும்போது, மாணவா்கள் தொங்கிக் கொண்டும், புத்தக பைகளை இருபுறமும் தொங்கவிட்டும் செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய செயல்பாடுகளை ஆட்டோ ஓட்டுநா்கள் தவிா்க்க வேண்டும்.

மேலும், ஷோ் ஆட்டோக்களில் அதிகபட்சமாக 4 போ் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை மீறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும். ஆட்டோ ஓட்டுநா்கள் விபத்தில்லா பயணத்தை ஏற்படுத்துவதில் உறுதிகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

மேலும், பெற்றோா் அதிக மாணவா்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டாம், பாதுகாப்பான ஆட்டோக்களைத் தோ்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com