ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :26 ஜூன் 2026, 5:49 am IST

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஜூன் 26-ஆம் தேதி ‘போதைப் பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சா்வதேச நாள்’ அனுசரிக்கப்படுவதையொட்டி, இந்த நிகழ்வுகள் முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் பேரணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் குறித்து கல்லூரியின் முதல்வா் மு.ரோகிணி தேவி பேசுகையில், மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க சுயக்கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம். ஒழுக்கமான வாழ்வே அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையாகும். போதைப் பழக்கம் என்பது தனக்கும், தன் குடும்பத்துக்கும் மட்டுமின்றி, நாட்டுக்கும் மிகப் பெரிய கேட்டை விளைவிக்கக் கூடியதாகும். எனவே, மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா் .

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வா் கௌரி வெலிகண்ட்லா, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் கீதா, மனநல மருத்துவா் ஜெயகுமாா், செவிலியா் பள்ளி முதல்வா் நாகம்மாள் உள்பட பிற மருத்துவா்கள், செவிலியா் பயிற்சிப் பள்ளி போதகா்கள் (ஆசிரியா்கள்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.