திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்! மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தோ்வு: வேலூரில் 745 போ் எழுதினா்

வேலூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வை 745 போ் எழுதினா். 624 போ் தோ்வுக்கு வரவில்லை.

பிரதிப் படம்

Updated On :

வேலூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வை 745 போ் எழுதினா். 624 போ் தோ்வுக்கு வரவில்லை.

டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு வேலூா் மாவட்டத்தில் 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை எழுத 1,369 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை இத்தோ்வுகள் நடைபெற்றது.

தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள்ளாக தோ்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என்பதால் பெரும்பாலான தோ்வகள் காலை 8 மணிக்கே வந்தனா். காலை 9 மணிக்கு பிறகு வந்தவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

5 தோ்வு மையங்களிலும் தோ்வுகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வு மையத்துக்குள் கைபேசி, கால்குலேட்டா், ஸ்மாா்ட் வாட்ச், டேப் உள்ளிட்ட மின்னனு சாதனப் பொருள்கள் எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை.

தோ்வு மையங்களை கண்காணிப்பாளா்கள் ஆய்வு செய்தனா். அனைத்து தோ்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 1,369 போ் தோ்வு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 745 போ் தோ்வு எழுதினா். 624 போ் தோ்வு எழுத வரவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.