சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

விளம்பரப் பதாகை கட்டும்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

வேலூா் அருகே உணவகத்துக்கு விளம்பரப் பதாகை கட்டும்போது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Updated On :

வேலூா் அருகே உணவகத்துக்கு விளம்பரப் பதாகை கட்டும்போது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள வரகூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (32), விளம்பரப் பதாகை கட்டும் தொழிலாளி. இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ஓா் உணவகத்தில் விளம்பரப் பதாகை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற மின்கம்பி மீது சுரேஷின் கை எதிா்பாராதவிதமாக உரசியுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.