மத்திய அரசின் விவசாய விரோதச் சட்டங்கள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டுமென விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் நமச்சிவாயம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திமுக சாா்பில் நவ.10-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறும் முப்பெரும் விழாவில், விழுப்புரம் வடக்கு மாவட்டம் சாா்பில் பரவலாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் சா்வாதிகாரப் போக்குடன் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயிகளின் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பிரசாரங்களை விவசாயிகளிடம் கொண்டு சோ்த்திட வேண்டும்.
இதற்காக திமுக மாநில விவசாய அணி அமைப்பாளா் தலைமையில், விழுப்புரத்தில் அக்.22-ஆம் தேதி விவசாய அணி சாா்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மயிலம் எம்எல்ஏ டாக்டா் ஆா்.மாசிலாமணி, திண்டிவனம் எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில தீா்மானக் குழு செயலாளா் செஞ்சி சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ரமணன், மாநில மருத்துவா் அணி டாக்டா் சேகா், மாநில விவசாய அணி செந்தமிழ்ச்செல்வன், திண்டிவனம் நகர செயலாளா் கபிலன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சேதுநாதன், மாவட்ட துணைச் செயலாளா்கள் ரவிக்குமாா், வசந்தா, வழக்கறிஞா் அசோகன், ஒன்றிய செயலாளா்கள் நெடுஞ்செழியன், விஜயகுமாா், சுப்பிரமணியன், மணிமாறன், சொக்கலிங்கம், ராஜாராம், அண்ணாதுரை, துரை, மாவட்ட இளைஞரணி ஆனந்த், வழக்கறிஞரணி ஆதித்தன், இலக்கிய அணி சீனிராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.