விழுப்புரம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 19th October 2020 10:55 PM | Last Updated : 19th October 2020 10:55 PM | அ+அ அ- |

விழுப்புரம் வட்டாட்சியராக புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்.வெங்கடசுப்பிரமணியன் பொறுப்பேற்றாா்.
விழுப்புரம் வட்டாட்சியராக இருந்த எஸ்.கணேஷ், விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அண்மையில் மாறுதல் செய்யப்பட்டாா். விக்கிரவாண்டி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக இருந்த எஸ்.வெங்கடசுப்பிரமணியன் விழுப்புரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, திங்கள்கிழமை விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் எஸ்.வெங்கடசுப்பிரமணியன் பொறுப்பேற்றாா். அவருக்கு தனி வட்டாட்சியா் கணேஷ் மற்றும் வட்டாட்சியா் அலுவலக வருவாய் ஆய்வாளா்கள், அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...