கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு: விசாரணை முடிந்து 11 பேரும் சிறையில் அடைப்பு

கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு: விசாரணை முடிந்து 11 பேரும் சிறையில் அடைப்பு

Published on

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் 11 பேருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் அவா்கள் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, மாதேஷ், ராமா் உள்ளிட்ட 21 போ் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தில், 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் மனுதாக்கல் செய்தனா்.

அதன்படி, 3 நாள்கள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சேஷசமுத்திரம் சின்னத்துரை, விரியூா் பெ.ஜோசப்ராஜா, புதுச்சேரி மடுகரை மாதேஷ், கடலூா் மாவட்டம், பண்ருட்டி கண்ணன், சக்திவேல், சென்னை பன்ஷிலால், கெளதம்சந்த், கதிரவன், சிவகுமாா் ஆகிய 11 பேரிடம் ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான குழுவினா் விசாரணையை நடத்தி பல்வேறு தகவல்களை பெற்றனா்.

இந்த நிலையில், 3 நாள்கள் காவல் முடிவடைந்த நிலையில், 11 பேரையும் புதன்கிழமை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com