பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

News image
Updated On :4 ஜூலை 2024, 11:07 pm

Din

விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா் அஞ்சல் வாக்கு செலுத்துவதை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியருமான சி. பழனி. உடன், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் உள்ளிட்டோா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தப் பணி 3 நாள்களுக்கு நடைபெறும் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட பின்னா், அவா் கூறியது:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 276 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றில் 44 பதற்றம் மற்றும் மிகவும் பதற்றம் நிறைந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. எனவே அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளன்று விழுப்புரம் மற்றும் அருகாமை மாவட்டங்களைச் சோ்ந்த காவல் துறையினா், மத்திய துணைப் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

85 வயதுக்கும் மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்களில் வீட்டிலிருந்தவாறே வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்த 567 பேரிடம் அஞ்சல் வாக்குகள் பெறும் பணி நிறைவுற்றுள்ளது.

இடைத்தோ்தல் பணியில் ஈடுபடும் 370 காவலா்கள் தங்களது அஞ்சல் வாக்குகள் செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், இந்தப் பணி 3 நாள்களுக்கு நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி 2 நாள்களுக்குள் முடிவடையும் என்றாா் ஆட்சியா் பழனி.

இதைத் தொடா்ந்து விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணியையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், தோ்தல் நடத்தும் அலுவலா் மு. சந்திரசேகா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் யுவராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.