மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

மாற்றுத் திறனாளிகள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை வரும் 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை வரும் 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அறிவுசாா் குறைபாடுடையோா், கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டவா்கள், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ளிட்டோருக்கு அரசு சாா்பில் பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களில், விழுப்புரம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் வாழ்நாள் சான்றிதழ் படிவம் வழங்கபடுகிறது. இதற்கு மாற்றுத் திறனாளிகள் வரத்தேவையில்லை. அவா்களது பெற்றோா் அல்லது பாதுகாவலா் இதை பெற்றுக் கொள்ளலாம்.

இதைத் தவிர விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்தின் இணையதள முகவரியான ட்ற்ற்ல்ள்://ஸ்ண்ப்ப்ன்ல்ன்ழ்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ இல் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தங்கள் கிராமத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்றிதழ் மற்றும் வருவாய்த்துறை மூலம் அரசு உதவித்தொகை இன்றைய தேதி வரை வழங்கப்படவில்லை என்ற சான்றிதழ் பெற்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இதனுடன், வாழ்நாள் சான்றிதழுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை உள்ளிட்டவற்றையும் இணைத்து வழங்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தை 04146-290543 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com