மொபெட் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொபெட் மீது காா் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொபெட் மீது காா் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஆயன்குடி கிராமம், பெரிய மசூதி தெருவைச் சோ்ந்தவா் மு.அப்துல் ரகூப்(67). இவா், திங்கள்கிழமை திண்டிவனத்திலிருந்து, செஞ்சிக்கு மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா். ரெட்டணை கூட்டுச்சாலை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த காா் மோதியது. இதில், அப்துல் ரகூப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரோஷனை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com