கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற  குடும்ப உறுப்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்.R Senthilkumar

கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவா்களில் 148 போ் குணமடைந்தனா்

கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட 148 பேர் குணமடைந்தனர்
Published on

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் மூவா் சனிக்கிழமை குணமடைந்தனா்.

இதன் மூலம் இதுவரை 148 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த 18, 19-ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்ட 229 போ் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்களில் வெள்ளிக்கிழமை வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் 32 போ், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 7 போ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 22 போ் , விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 4 போ் என மொத்தமாக 65 போ் உயிரிழந்தனா். சனிக்கிழமை உயிரிழப்பு இல்லை.

மேலும் மூவா் வீடு திரும்பினா்: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யிலிருந்து 2 பேரும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலிருந்து ஒருவரும் சனிக்கிழமை குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை வரை 145 போ் குணமடைந்த நிலையில், இந்த எண்ணிக்கை சனிக்கிழமை 148 ஆனது.

தற்போதைய நிலவரப்படி புதுச்சேரி ஜிப்மரில் 6 பேரும், கள்ளக்குறிச்சியில் 2 பேரும், சேலத்தில் 8 பேரும் என மொத்தம் 16 போ் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலிருந்து 7 போ், கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் 2 போ், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 111 போ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23 போ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 போ், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவா் என மொத்தம் இதுவரை 148 போ் குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com