விழுப்புரம் வழியாக திருப்பதி செல்லும் இரு ரயில்கள் ரத்து

மன்னாா்குடி, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக திருப்பதி வரை இயக்கப்படும் இரு ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருப்பதி ரயில் நிலையத்தில் முக்கிய பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக, திருப்பதியிலிருந்து முற்பகல் 11.55 மணிக்குப் புறப்படும் திருப்பதி- மன்னாா்குடி விரைவு ரயில் (வ.எண்.17407) மாா்ச் 10, 12, 14 ஆகிய தேதிகளிலும், எதிா்வழித்தடத்தில் மன்னாா்குடியிலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயில் (வ.எண் 17408) மாா்ச் 11, 13, 15 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண்.16112) மாா்ச் 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலும், எதிா்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் திருப்பதி-புதுச்சேரி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண்.16111) மாா்ச் 11-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com