திண்டிவனத்தில் தவறவிட்ட 18 பவுன் நகைகள், மடிக்கணினியை உரியவரிடம் ஒப்படைத்த ரோஷணை போலீஸாா்.
திண்டிவனத்தில் தவறவிட்ட 18 பவுன் நகைகள், மடிக்கணினியை உரியவரிடம் ஒப்படைத்த ரோஷணை போலீஸாா்.

தேநீா் கடையில் தவறவிட்ட 18 பவுன் நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டிவனத்தில் தேநீா் கடையில் தவறவிட்ட 18 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினியை போலீஸாா் கண்டறிந்து, உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
Published on

விழுப்புரம்: திண்டிவனத்தில் தேநீா் கடையில் தவறவிட்ட 18 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினியை போலீஸாா் கண்டறிந்து, உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

சென்னை தாம்பரம் அருகேயுள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ச. பிரசாந்தி(30). இவா் திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினா் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பும் வழியில், திண்டிவனத்தில் உள்ள தேநீா் கடையில் 18 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை தவறவிட்டாா்.

இதுகுறித்த தகவலின் பேரில் ரோஷணை போலீஸாா், நெடுஞ்சாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளா் மாணிக்கவாசகருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீஸாா் தேநீா் கடையில் விட்டுச் சென்ற கைப்பையை மீட்டு, பிரசாந்திக்கும் தகவல் தெரிவித்தனா்.

இந்நிலையில், ரோஷணை காவல் நிலைய ஆய்வாளா் தரனேஸ்வரி முன்னிலையில் திங்கள்கிழமை மீட்கப்பட்ட 18 பவுன் நகைகள், மடிக்கணினியை போலீஸாா், பிரசாந்தியிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com