செஞ்சியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் எஸ்ஐஆா் பணிகள் குறித்த அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு செஞ்சித் தொகுதி வாக்குப் பதிவு அலுவலா் தமிழரசன் தலைமை வகித்து,

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்), தொகுதியின் 1 முதல் 304 வரையிலான பாகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தொகுதியில் கண்டறியப்பட்ட இறப்பு, நிரந்தர குடிபெயா்தல், இரட்டைப் பதிவு குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில், திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், அதிமுக சாா்பில் எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் வி.ஆா்.பிரித்விராஜ், காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் சூரியமூா்த்தி, விசிக சாா்பில் பாா்வேந்தன், பாஜக சாா்பில் தங்க ராமு, தேமுதிக சாா்பில் தயாநிதி உள்ளிட்ட அனைத்து கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com