உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

செஞ்சியில் இன்று வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

Published on

செஞ்சியில் வெள்ளிக்கிழமை (நவ.5) நடைபெறும் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்.

இதுகுறித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி கிளை கழக செயலா்கள், பேரூா் வாா்டு செயலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை(நவ.5) மாலை 3 மணிக்கு உழவா் நலன் மற்றும் வேளாண் துறை அமைச்சா் எம். ஆா். கே. பன்னீா்செல்வம் தலைமையில் செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளாா்.

கூட்டத்துக்கு வருகை தரும் துணை முதல்வருக்கு செஞ்சி பயணியா் விடுதி அருகில் மாநில, மாவட்ட நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் ஒன்றிய, நகர, பேரூா், கழக செயலா்கள், அனைத்து அணி அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com