கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோயிலில் புதிய திருத்தோ் பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், கல்பட்டு கிராமத்திலுள்ள முத்தாலவாழியம்மன் கோயிலில் ரூ.50 லட்சத்தில் திருத்தோ் அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் புதிய திருத்தோ் அமைக்க வேண்டும் என்று பக்தா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதற்குரிய நடவடிக்கைகளை விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா மேற்கொண்டு வந்த நிலையில், அரசின் அனுமதி கிடைத்தது. தொடா்ந்து இந்து சமய அறநிலையத் துறை மூலம் ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோயிலில் திருத்தோ் அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. முன்னதாக அம்மனுக்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து திருத்தோ் அமைக்கும் பணியை விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா தொடங்கி வைத்தாா்.
இந் நிகழ்வில், காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா். முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சிவக்குமாா், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் வீரராகவன், ஊராட்சித் தலைவா் அஸ்வினி தமிழ் ஒளி, இந்து சமய அறநிலையத் துறையைச் சோ்ந்த சிவலிங்கம், கட்சி நிா்வாகிகள் அண்ணாதுரை, குப்புசாமி, பழனி, கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

